குடிமகன்கள் மது அருந்துவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆக குறைக்க அரியானா அரசு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் குடிமகன்கள் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியானா மாநிலத்தில் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 25 ஆக இருந்தது. தற்போது அதனை 21 வயதாக குறைக்க அரியானா அரசு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையில் மக்கள் கல்வியறிவு பெற்று குடிப்பழக்கம் தொடர்பான பகுத்தறிவு கொண்டவர்களாக இருப்பதாக அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியிலும் குறைந்தபட்ச வயதை 21 ஆக அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.