Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுக்கடையில் வந்த தகராறு…. போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு…. ஈரோட்டில் பரபரப்பு….!!

மதுபான கடையில் ஏற்பட்ட  தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் வீட்டுவசதிப்பிரிவு பகுதியில் ராஜூ என்பவர் வசித்து வருகின்றார். இவர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகின்றார். இவர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது சுண்ணாம்பு ஓடை பவானி ரோடு பகுதியில் உள்ள மதுபானக் கடையில் தகராறு நடைபெறுவதாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் ஏட்டு ராஜூ சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் திடீரென ஏட்டு ராஜூவை தாக்கியதோடு அவர் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் ராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்ததும் அருகில் இருப்பவர்கள் ராஜூவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ராஜூவை அரிவாளால் வெட்டிய நபரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியவந்தது. மேலும் போலீஸ் ஏட்டு ராஜூவை வெட்டியதற்கான காரணம் குறித்து அந்த நபரிடம் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் போன்றோர் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஏட்டு ராஜூவை பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். மேலும் ஏட்டு ராஜூக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார். இதனைதொடர்ந்து ராஜூக்கு அறுவை சிகிச்சை முறையில் மருத்துவம் அளிக்கப்பட்டது. அதன்பின் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியபோது மதுபான கடையில் வந்த தகராறில் ஏட்டு ராஜுக்கு வெட்டு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனவே இதுகுறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |