Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பணம் கேட்டு தகராறு” மதுபான ஊழியருக்கு அடி உதை…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

பணம் கேட்டு தரமறுத்த மதுபான ஊழியரை அ.தி.மு.க பிரமுகர் தாக்கிய சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அறந்தாங்கி சாலையில் இருக்கும் மதுபானக் கடையில் ஊழியராக  வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் மதுபான கடைக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நகர பேரவை செயலாளராக இருக்கும் மண்டலமுத்து என்பவர் பணம் கேட்டு கார்த்திகேயனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து கார்த்திகேயன் பணம் தர மறுத்ததால் வாக்குவாதம் முற்றவே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது கார்த்திகேயனை மண்டலமுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து காயமடந்த கார்த்திகேயன் காவல்நிலையத்தில் புகார்  அளித்துள்ளார்.அந்தபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அறந்தாங்கி காவல்துறையினர் மண்டலமுத்துவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |