Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. சோதனையில் சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தில் மதுபாட்டில் கடத்தி வந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில்கள் கடத்தி வருவதை அறிந்த காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்றில் பழங்கள் எடுத்து வந்த பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கடத்தி வந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் 576 மது பாட்டில்களை பதுக்கி வைத்து எடுத்து வந்த நபர்களை விசாரணை செய்த போது அவர்கள் சக்தி விநாயகம், பாலு, ராமராஜ், விக்கிரமன், 18 வயது சிறுவன் மற்றும் உத்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த குற்றத்துக்காக ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 576 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |