சரக்கு வாகனத்தின் மூலமாக மதுபாட்டில்களை கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சாலை பகுதியில் கலவை காவல்துறை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளார்.
அந்த சோதனையில் வாகனத்தின் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஓட்டுனரிடம் காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர் கோவிந்தன் என்பதும் மதுபாட்டில்களை கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிந்தனை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.