பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மும்முனை சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பேருந்திலிருந்து இறங்கி வந்த பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் அவரை விசாரணை நடத்தியதில் அவர் சித்தால் கிராமத்தில் வசிக்கும் பச்சையம்மாள் என்பதும், புதுச்சேரி பகுதியில் இருந்து மதுபாட்டில்களை பேருந்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய இருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பச்சையம்மாளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 49 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.