மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் எட்டிகுட்டை பகுதியில் வசிப்பவர்கள் பெங்களூரில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தனிப்படை காவல்துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் மூன்று லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காரில் பயணம் செய்த சிதம்பரம் மற்றும் சின்னத்தம்பி ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.