Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதற்காக தான் கடத்தினோம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடி வழியாக மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்கச் சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி, கார் ஆகிய இரண்டையும் நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்ததில் 1,344 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின் கடத்தலில் ஈடுபட்டவர்களை விசாரணை நடத்தியதில் அவர்கள் ஐயப்பன், பிரகாஷ், ராஜ்குமார், மணிமாறன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 1,344 மது பாட்டில்கள் மற்றும் கார், மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |