சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முருகையன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
இந்த சோதனையில் இவர்களின் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.