மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வீரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் மெயின் ரோட்டில் வசிக்கும் பரிமளா என்பவர் வீட்டில் வைத்து மது விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் பரிமளா வீட்டை சோதனை செய்த போது பின்புற பகுதியில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரிமளாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.