மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரியப்பா நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சரவணன் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரின் வீட்டின் அறையில் இருந்த சாக்கு மூட்டைகளை காவல்துறையினர் பிரித்து பார்த்த போது மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த மூட்டைகளில் மொத்தமாக 1,920 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரவணன் அதே பகுதியில் இருக்கும் மதுபான கடை அருகில் பார் நடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் கொரோனா காரணத்தினால் பார் மூடப்பட்டதால் மதுக்கடையிலிருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.