Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படி போய் தான் ஆகணுமா…? மதுபிரியர்களின் சாகசம்… சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

மது பிரியர்கள் மாவட்ட எல்லையை ஆபத்தான முறையில் கடப்பதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மது பிரியர்கள் மாவட்ட எல்லையை கடந்து சென்று மதுவினை வாங்குகின்றனர். இந்நிலையில் மடத்துக்குளம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு செல்வதற்காக மது பிரியர்கள் ஆபத்தான முறையில் அமராவதி ஆற்றை கடந்து செல்கின்றனர். அதிலும் சிலர் ராஜாவாய்க்காலை கடந்து செல்லும்போது தனது சைக்கிளை தூக்கிக்கொண்டு குறுக்கே போடப்பட்டிருக்கும் கட்டையின் மீது நடந்து செல்கின்றனர்.

இவ்வாறு ஆபத்தான முறையில் மது பிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சிலர் ஆபத்தை உணராமல் தண்டவாளம் வழியாக பல கிலோ மீட்டர் நடந்து சென்று மது வாங்குவதால் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆபத்தை உணராமல் மாவட்ட எல்லையை தாண்டுவதற்கு முயற்சி செய்யும் மது பிரியர்களை காவல்துறையினர் தடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

Categories

Tech |