Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வாலிபர்…. காரின் வேகம்…. விபத்து நடந்தும் நிக்கல…. பொதுமக்கள் ஆத்திரம்…!!

வாலிபர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள  மூலக்கரை மூட்டா காலனியை  சேர்ந்தவர் ரிஷிவரன். இவர் பூடான் நாட்டில் எம்.பி.ஏ முடித்துள்ளார்.  நேற்று இவரது நண்பர் விஜயின் பிறந்த நாள் காரணமாக மதுரையில் உள்ள ஓட்டலில் ரிஷிவரனுக்கு  விருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். பின்னர் இரவு  குடிபோதையில் வீடு திரும்பிய ரிஷிவரன் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது எல்லீஸ்நகர்- கென்னெட்  சந்திப்பில் அரசுபேருந்து மற்றும்  மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதது .

இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த அஜித் குமார் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடந்த பின்னரும்  ரிஷிவரன் காரை நிறுத்தாமல்  தொடர்ந்து மூலக்கரையில் உள்ள தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அலங்காநத்தம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தபோது  அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் இருந்த இறைச்சி கடை,  பிளாஸ்டிக் கடை, ஆகிய  கடைகளுக்குள் புகுந்து சேதப்படுத்தியது.

இரவு நேரம் கடைகளுக்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.    இந்நிலையில் கார் நின்றுவிட ரிஷிவரன் சுயநினைவு இல்லாமல் இருந்தார். விபத்தின் காரணமாக காரிலுள்ள காற்றுப்பை திறந்திருந்து ரிஷிவரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய அவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். தற்செயலாக அங்கு வந்த போலீசார் ரிஷிவரனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |