Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா தொற்று…!


மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 270 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று அரசு அறிவித்துள்ள செய்திகுறிப்பின் படி 3133 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3403 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா சிகிச்சைக்காக இயங்கிவரும் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 887 ஆக உள்ளது.

தற்போது அரசு சிறப்பு மருத்துவமனை, சிறப்பு முகாம்கள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் தங்கி இருக்கும் முகாம்கள் போன்றவற்றில் 2203 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாகவே மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் மதுரை மக்கள் பெரும் அச்சத்துடன் இருக்கிறார்கள்.

Categories

Tech |