மதுவில் போதை மாத்திரை கலந்து விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சித்தமநாயக்கன்பட்டி பகுதியில் எம்.புதுப்பட்டி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் முத்துமணி, கதிரேசன் ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டபோது மதுவுடன் போதை மாத்திரைகள் கலந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.