Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மதுவிலக்கு பிரிவில் பணிபுரிந்து…. புதியதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு…. அறிவித்து அறிவிப்பு…!!!

 மதுவிலக்கு பிரிவில் பணிபுரிந்த உதயசூரியன் என்பவர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய கலைக்கதிரவன் என்பவரை ஜெயம்கொண்டான் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் அங்கு தற்போது நெல்லை மதுவிலக்கு பிரிவில் பணி புரிந்த  உதயசூரியன் என்பவரை அப்பகுதிக்கு புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கூறும்போது கோவில்பட்டி நகரில் சட்ட ஒழுங்கு சீர் குலையாத படிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கொரோனா தொற்றினை பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் பல தளர்வுகளை அறிவித்துள்ளதால் அதனை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் தேவை இல்லாமல் வெளியே சென்றால் காவல்துறையினர் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா, மது, புகையிலை, போன்றவற்றை விற்பனை செய்பவரின் மீது பொதுமக்கள் யாரேனும் புகார் கொடுத்தால் விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் கொடுப்பவரின் பெயரை  ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள் சட்டவிரோதமாக பொருட்களை விற்பனை செய்பவர்களின்  மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |