நாகை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்(வயது 27). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் .இதனால் மனமுடைந்த அவர் சம்பவ தினத்தன்று வீட்டில் பயிர்களுக்கு பயன்படுத்தபடும் விஷ மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .இதன் பிறகு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.