Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மடிப்பாக்கம் ஐயப்பன் கோவிலில் கோடி அய்யப்ப பூர்த்தி ஹோமம் …!!

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம கோடி ஜப பூர்த்தி ஹோமம் நடைபெற்றது.

சென்னை மடிப்பாக்கத்தில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயமானது. 18 படைகளைக் கொண்டு சபரிமலையைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசனை பெரும்பாலும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம கோடி ஜப பூர்த்தி ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலயத்தின் துணைத்தலைவர் ராமசுப்ரமணியன், மகாதேவன், மகாலிங்கம் ஆகியவர்கள் ஆலயத்தில் கலந்து கொண்டனர்.

ஆடி 1-ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை தினந்தோறும் மாலை 5 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கராச்சாரியார்கள் உத்தரவின்படி ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம கோடி ஜபம் ஜனவரி மாதம் நடைபெறுவதாக ஆலயத்தின் செயலாளர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்

Categories

Tech |