Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளி கொலை வழக்கு” வெளிவந்த திடுக்கிடும் தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மாற்றுத்திறனாளி பெண் கொலை வழக்கில் மும்பை பெண்ணின் காதலனை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தேஜ்மண்டல் சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிப்பட்டியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சங்கர்நகர், பள்ளப்பட்டி போன்ற இடங்களில் அழகு நிலையம் நடத்தி வந்தார். கடந்த 15-ஆம் தேதியன்று தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கொலை தொடர்பாக தேஜ்மண்டலுடன் தங்கியிருந்த ஆத்தூரை சேர்ந்த பிரதாப் என்பவரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் தேஜ்மண்டல் அழகு நிலையத்தில் வேலை பார்த்த வங்காளதேசத்தை சேர்ந்த லப்லு, நிஷி, மும்பையை சேர்ந்த ரிஷி, பெங்களூரை சேர்ந்த ஷீலா ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தனிப்படையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பிரதாப்பை தனிப்படை காவல்துறையினர் பெங்களூர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ரிஷியின் காதலன் வினய் என்பவரை காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வினயிடம் உரிய விசாரணை மேற்கொண்டு ரிஷியை பிடிப்பதற்கு தனிப்படையினர் மும்பை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |