மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் உயர்நிலைக் குழு செயலாளர் குமாரசாமி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை குறித்து அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.