மாற்றுத்திறனாளிகளுக்கான பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி சி.ஆர்.பி.எஃப் வளாகத்தில் இருக்கும் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சி.ஆர்.பி.எஃப்-ல் பணிபுரியும் அதிகாரிகளின் குழந்தைகள் 12 பேர் கலந்துகொண்டனர். இதில் சி.ஆர்.பி.எஃப் டி. ஐ.ஜி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் தேசிய அளவில் கூடைப்பந்து, வீழ்சேர், பரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற 5 மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பேஷன் ஷோவில் மாற்றுத்திறனாளிகள் மாடல் அழகிகளுடன் வீல்சேரில் வந்து பங்கேற்றனர். மேலும் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.