மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் என்ற கேவிக்குஅமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலான பதிலளித்துள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் நேற்று சிந்தாதிரிப்பேட்டையில் கபசுர குடிநீர் முக கவசம் ஊட்டச் சத்து மாத்திரைகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களின் பல கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அப்போது, உயிரிழப்பை பொருத்தவரை ஒரு உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி நாம ரொம்ப ரொம்ப குறைவு. கிட்டத்தட்ட ஜீரோ புள்ளி 0.88 சதவீதம் தான். இது மற்ற மாநிலங்களில் கிட்டத்தட்ட அதிகமாக இருக்கிற சூழ்நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை முதலைமைசர் சேலத்தில் பேட்டி கொடுத்தார். உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. முதலமைச்சர் சொன்னதுபோல சூழ்நிலைக்கேற்ப தளர்வுகள் என்பது அறிவிக்கப்படுத்து. கொரோனா கிட்டத்தட்ட ஆறு மாசமோ, ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமா இருக்கும். இரண்டு வருஷம் ஒருத்தருடைய வாழ்வாதாரத்தை முடக்கிப் போட முடியுமா ? யாராலயும் முடியாது. வாழ்வாதாரத்தையும் பாக்கணும், அதே நேரத்துல கொரோனாவை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கை எடுக்கணும் என்று தெரிவித்தார்.
மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தவறு எங்கு நடந்தது என்று நினைக்கிறீர்கள் ? மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க தவறி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த அமைச்சர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக சட்ட அமைச்சர் பைல் பண்ணி இருக்காரு. மேட்டர் வந்து கோர்ட்ல இருக்கு. கோர்ட்ல இருக்குற விஷயத பேசக்கூடாது என்று மத்திய அரசை கண்டிக்காத வகையில் மழுப்பலான பதிலளித்தார்.