Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா.? மத்திய அரசு புதிய திட்டம்..!!

இந்தியாவில் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் ஏப்ரல் 14ம் தேதி பிறகு ஊரடங்கு தளர்த்தப் மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 21 நாட்கள் ஊரடங்கு இந்த மாதம் 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  இந்நிலையில்  நீட்டிக்கப்படுமா அல்லது தொடருமா என்பதை நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் 14ம் தேதிக்கு பிறகு தனிமைப்படுத்தவும் தீவிரமாக கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி குறிப்பிட்டஇடங்களை மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்தல், சமூக இடைவெளி, சந்தேகத்திற்கு உரியவர்களுக்குப் பரிசோதனை, தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதை தொடர்நது மக்கள் நடமாட்டத்திற்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. கொரோனா  சங்கிலி போல நீடிப்பதை உடைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதே நேரத்தில் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஏப்ரல் 14-ம் தேதியில் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கான  வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |