கியூபாவில் நடந்துவரும் போராட்டத்தினால் பிற நாடுகளில் இருந்து வரும் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தற்காலிமாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கியூபாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நாளொன்றுக்கு 5000 பேர் பாதிக்கப்படுவதாகவும் 40க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது. கியூபா நாட்டில் சுற்றுலாத்துறை தான் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாகும். கியூபாவில் கொரோனா பரவலால் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் வருமான இழப்பின் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கியூபாவில் கிளர்ச்சியாளர்களினால் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் கூறியதாவது “கியூபா அரசு கொரோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தவறியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள் மற்றும் மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளித்துள்ளது. இதற்கு கியூபா அதிபர் பதில் கூறியதாவது “கியூபாவின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவின் பொருளாதார தடை தான் காரணம் என்றும் போராட்டங்கள் அமெரிக்காவினால் தான் தூண்டப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கியூபாவில் கிளர்ச்சியாளர்களினால் ஏற்பட்டுள்ள போராட்டத்திற்கு எதிராக கியூபாவின் புரட்சியாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கியூபா அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த போராட்டங்களினால் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை மற்ற நாடுகளில் இருந்து வரும் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தற்காலிகமாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.