Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு கோடிக்கும் மேல்…. விற்பனையான மாடுகள்…. சந்தை நிர்வாகிகளின் தகவல்….!!

மாட்டு சந்தையில் ஒரு கோடிக்கும் மேல் மாடுகள் விற்பனையாகியுள்ளன.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனாபுரத்தில் மாட்டுச் சந்தை கூடியுள்ளது. இந்த சந்தையில் ஈரோடு தர்மபுரி சேலம் நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து விர்ஜின் கலப்பின கறவை மாடு 35 ஆயிரம் ரூபாய்க்கும், கிடாரி கன்று 25 ஆயிரம் ரூபாய்க்கும், ஜெர்சி வகை கறவை மாடு 25 ஆயிரம் ரூபாய்க்கும், எருமை மாடு 75 ஆயிரம் ரூபாய்க்கும் சந்தையில் விற்பனையாகியுள்ளது.

இவ்வாறாக பல்லடம், குன்னத்தூர், சென்னிமலை, பூந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் மாடுகளை வாங்கிச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது ஒரு கோடி ரூபாய்க்கும்  மேலாக மாடுகள் விற்பனையாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |