மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் மாட்டுவண்டியில் சிலர் வருவதைக் கண்டு அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது கார்குடி சுத்தமல்லி ஓடையில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது அதிகாரிக்கு தெரியவந்தது. இதனையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்களான வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, கார்குடி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன், கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்த பழனிராசு, பெரியசாமி, சுரேஷ்குமார் போன்றோரை தா.பழூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார்.
மேலும் மாட்டு வண்டிகளையும் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலர் ஒப்படைத்துள்ளார். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து 5 பேரும் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் அரியலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அதன்பின் காவல்துறையினர் 5 மாட்டு வண்டிகளையும் மணலோடு பறிமுதல் செய்துள்ளனர்.