பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுவண்டி ஊர்வலம் நடைபெற்றது.
விருதுநகரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுவண்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாசொக்கர், சிவகாமி எம்.எல்.ஏ. அசோகன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர காங்கிரஸ் தலைவர் வெயிலு முத்து, காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இந்த மாட்டு வண்டி ஊர்வலம் விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்டு மெயின் பஜார் வழியாக தேசபந்து திடல் அருகில் முடிவடைந்தது.