Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க…. புதிதாக இவ்வளவு பேர் நியமனம்…. மாவட்ட கலெக்டரின் அதிரடி….!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 20 மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. எனவே தொற்றால் பாதிக்கப்பட்ட  நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் 832 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனையில் 1235 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் பயன்பாட்டில் இருக்கின்றது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், 39 தீவிர சிகிச்சைக்கான ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் உருவாக்கப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 20 மருத்துவர்களும், 100 செவிலியர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பரிசோதனையில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு கூடுதலாக 20 லேப் டெக்னீசியன்கள் மாவட்டம் முழுவதும் நியமிக்கப்படுவர் என மாவட்ட கலெக்டர் பார்த்திபன் கூறியுள்ளார்.

Categories

Tech |