ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்ட அனிதாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த மதன்குமார் திடீரென கரூர் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் பணியாற்றி வந்த அனிதா ராணிப்பேட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட அனிதாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.