Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் முகாம்…. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…. சமூக இடைவெளியுடன் மக்கள்….!!

திருவாரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை எம்.எல்.ஏ தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி 18 வயது மேல் இருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில், சுந்தரக்கோட்டை மகாதேவபட்டினம் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மன்னார்குடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்துள்ளார்.

இந்த முகாமில் மன்னார்குடி நகர திமுக செயலாளர் வீரா. கணேசன், மாநில மாணவரணி துணை செயலாளர் த. சோழராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் முகாமிற்கு சென்று சமூக இடைவெளியுடன் தடுப்புசி செலுத்தி கொண்டனர்.

Categories

Tech |