மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பாக மாவட்ட அளவிலான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கூட்ட அரங்கத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி உள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்களிலும் மற்றும் மக்கள் தீர்ப்பு நாள் கூட்டத்தின் வாயிலாகவும் இதுவரை 18, 573 மனுக்கள் பெறப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக பொதுமக்களுக்கு தேசிய அடையாள அட்டையானது வழங்கப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து மீதமிருக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாண இருக்கின்றனர். பின்னர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மத்திய கூட்டுறவு வங்கி கடன் உதவி வழங்குதல், பள்ளி கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்குதல், சுய உதவி குழுக்கள் அமைத்து அதன் வாயிலாக உதவி வழங்குதல், தொழில் மையம் ஆகியவை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.