மக்களின் குறைகளை எளிதாக தீர்க்க வாட்ஸ்அப் எண்ணை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க புதிய முறையை அறிவித்துள்ளார். அதன்படி வாட்ஸ் அப் மூலமாக மக்கள் தங்கள் குறையை எளிதாக குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பலாம்.
மேலும் புகைப்படங்கள் காணொளிகள் ஆதாரங்களை அனுப்பி தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து 9489829964 என்ற வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிமுகப்படுத்தியுள்ளார்.