ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓம் பிரகாஷ் மீனா என்பவர் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது அவர் ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு பதில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக தேஷ்முக் சேகர் சஞ்சய் என்பவர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறும்போது, ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாகவும் அரணாகவும் இருப்பேன் எனவும், பொதுமக்களின் தேவைகளை கேட்டறிந்து அதனை உடனுக்குடன் பூர்த்தி செய்து வைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் எச்சரித்துள்ளார்.