Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘மேக்ஸ்வெல்-யை ‘ எதுக்கு இவ்ளோ…கோடிக்கு ரூபாய்க்கு எடுக்குறீங்க… காண்டான ‘கௌதம் கம்பீர்’ …!!!

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வீரரான மேக்ஸ்வெல், அணி மாறிக்கொண்டே இருப்பதைப் பற்றி ,முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ,சுழல் பந்து வீச்சாளரான மேக்ஸ்வெல் தொடர்ந்து ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கே தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், தற்போது  ஆர்சிபி அணிக்காக விளையாட உள்ளார். அவரை ஆர்சிபி அணி 14 .25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்குமுன் நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் மேக்ஸ்வெல் டெல்லி கேப்பிடல் ,மும்பை இந்தியன்ஸ் ,கிங்ஸ் லெவன் பஞ்சாப் போன்ற அணிககளுக்காக விளையாடினார்.

ஆனால் அவர் பல அணிகளுக்கு ,மாறிக் கொண்டே இருந்தார். இதற்குக் காரணம் அவருடைய பேட்டிங்கை சிறப்பாக வெளிப்படுத்தாதது, என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.  மேக்ஸ்வெல் பற்றி அவர் கூறும்போது , மேக்ஸ்வெல் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டாலும் ,அவர் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இல்லை. இதன் காரணமாகவே அவர் பல அணிகளுக்கு மாறிக்கொண்டே இருக்கிறார். ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி இருந்தால் அவரை அந்த அணியினர் ரிலீஸ் செய்திருக்க மாட்டார்கள்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மேக்ஸ்வெல் வெறித்தனமான  ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதே நிலையை மற்ற தொடரிலும்,  மேக்ஸ்வெல் கடைப்பிடித்திருந்தால்  எந்த அணியும் அவரை ஏலத்தில் விட்டுக்கொடுத்திருக்காது. ஆனால் கொல்கத்தா அணியில் விளையாடி வரும் அந்த்ரே ரஸல் , தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், அவர் கொல்கத்தா அணியில் நீண்டகாலமாக விளையாடி வருகிறார். இவ்வாறு கௌதம் கம்பீர் ,மேக்ஸ்வெல்-யை  பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |