உழைப்பாளர்கள் தினம் ஏன் மே 1 கொண்டாடப்படுகிறது சிறப்பு வரலாறு
மே 1 உழைப்பாளர் தினம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். உலகம் முழுக்க முழுக்க உழைக்கும் மக்களை கொண்டாடும் தினம்தான் உழைப்பாளர்கள் தினம். வருஷத்தோட 365 நாளில் எல்லா நாளும் உழைக்கும் மக்களை ஏன் மே 1 மட்டும் உழைப்பாளர்களா கொண்டாடும் உழைப்பாளர் தினம் என்று சொல்றாங்க.
இப்போதெல்லாம் அரசு வேலையோ தனியார் வேலையோ வேலை நேரம் எட்டு மணி நேரம் தான். காலையில் வேலைக்கு வந்து மாலை வேலை முடித்து கிளம்பி குடும்பத்துடன் நேரம் செலவு செய்வோம் அப்படியே சந்தோசமா இருக்கும். ஆனால் 1800களில் 18 லிருந்து 20 மணி நேரம் எந்த இடைவெளி இல்லாம வேலை செய்வார்கள்.
அதற்கு பின்னர் அரசு வேலை பார்ப்பவர்கள் 10 மணி நேரம் தான் உழைக்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த பத்து மணி நேரத்தையும் குறைக்க தொழிலாளர்கள் போராட்டம் பண்ணினார்கள். முதலாளிகள் அனைவரும் இந்தப் போராட்டத்தை கைவிட செய்ய எத்தனையோ முயற்சி செய்தார்கள்.
இவ்வளவு ஏன் இதனால் துப்பாக்கி சூடு கூட அந்தப் போராட்டத்தில் நடந்தது. இதனால் நிறைய உயிர் பலியும், பல பேர்க்கு படுகாயம் ஏற்பட்டுச்சு. ஹே மார்க்கெட் என்ற இடத்தில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய போராட்டமே செய்தார்கள். இந்தப் போராட்டத்தில் நிறைய பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1988 இல் அமெரிக்காவில் கூடின தொழிற்சங்கங்கள் தொழில் கூட்டு மாநாட்டுல 8 மணி நேரம்தான் வேலை பார்ப்போம் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். 1904 ஆம்ஸ்டர்டாம் தொழிலாளர்கள் மாநாட்டில் ஒவ்வொரு மே 1ஆம் தேதியும் தொழிலாளர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு முடிவு எடுத்தார்கள்.
இன்று கம்யூனிசத்தை தீவிரமாய் எதிர்க்கிற அமெரிக்கா தான் முதன் முதலாக மே தினத்தை கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால் இன்று அமெரிக்காவில் மே தின உழைப்பாளர் தினம் ஒன்று இருந்தது என்பதை மறந்துவிட்டார்கள். சுமார் 80 நாடுகளில் மே தினத்தை தேசிய விடுமுறையோட தொழிலாளர் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவில் தோழர் சிங்காரவேலர் தலைமையில 1923 ஆம் வருஷம் சென்னையில் முதன்முதலாக உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. 8 மணி நேரம் வேலைபார்த்த பின்னர் வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவிட அப்பவே பல உயிர் தியாகங்கள் நடந்து இருக்கு. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.