Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 11..!!

இன்றைய தினம் : 2019 மே 11

கிரிகோரியன் ஆண்டு : 131_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 132_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 234 நாட்கள் உள்ளன .

 

இன்றைய தின நிகழ்வுகள் : 

330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது.

868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும்.

912 – அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார்.

1310 – பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் எரித்தார்.

1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை அமெரிக்கக் கண்டம் நோக்கி ஆரம்பித்தார்.

1672 – பிரான்சின் பதினான்காம் லூயி இடச்சுக் குடியரசை முற்றுகையிட்டான்.

1745 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலோ-இடச்சு-அனோவர் படைகளைத் தோற்கடித்தன.

1812 – இலண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் இசுப்பென்சர் பெர்சிவல் ஜோன் பெல்லிங்கம் என்பவனால் கொல்லப்பட்டார்.

1833 – பிரித்தானியாவின் லேடி ஒஃப் த லேக் பயணிகள் படகு நியூபவுண்ட்லாந்து தீவுக் கரையில் பனிமலை ஒன்றின் மீது மோதி மூழ்கியதில் 265 பேர் உயிரிழந்தனர்.

1846 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்க அரசுத் தலைவர் ஜேம்ஸ் போக் மெக்சிக்கோ மீது போரை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். மே13 இல் போருக்கு அனுமதி கிடைத்தது.

1857 – சிப்பாய்க் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் தில்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.

1858 – மினசோட்டா அமெரிக்காவின் 32வது மாநிலமாக அனுமதிக்கப்பட்டது.

1891 – சப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த உருசிய இளவரசர் நிக்கொலாசு சப்பானியக் காவல்துறையினனின் வாள் வீச்சில் இருந்து தப்பினார். இவர் கிரேக்க, டென்மார்க் இளவரசர்களினால் காப்பாற்றப்பட்டார்.

1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.

1924 – மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றின.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஒக்கினாவா கரையில் அமெரிக்க வானூர்தித் தாங்கிக் கப்பல் மீது சப்பானிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 346 பேர் கொல்லப்பட்டனர்.

1949 – சியாம் நாடு தாய்லாந்து என இரண்டாவது தடவையாகப் பெயர் மாற்றம் பெற்றது.

1953 – டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.

1960 – முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.

1972 – ஐக்கிய அமெரிக்கா அணுகுண்டு சோதனையை நெவாடாவில் நடத்தியது.

1985 – இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் உயிரிழந்தனர்.

1995 – 170 நாடுகள் அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

1996 – எவரெசுட்டு சிகரத்தில் இடம்பெற்ற பனிப்புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

1996 – மியாமியில் இருந்து புறப்பட்ட விமானம் தீப்பிடித்து வீழ்ந்ததில் அனைத்து 110 பயணிகளும் உயிரிழந்தனர்.

1997 – ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.

1998 – இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.

2011 – எசுப்பானியாவில் லோர்க்கா என்ற நகரில் இடம்பெற்ற 5.1 அளவு நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

2013 – துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

2014 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கின்சாசா நகரில் காற்பந்து விளையாட்டரங்கில் இடம்பெற்ற நெரிசலில் 15 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள் : 

1669 – ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர் (இ. 1735)

1824 – ஜீன் லியோன் ஜேர்மி, பிரான்சிய ஓவியர், சிற்பி (இ. 1904)

1875 – ஹரியெட் குயிம்பி, அமெரிக்க விமான ஓட்டி, எழுத்தாளர் (இ. 1912)

1881 – தியோடர் வான் கார்மன், அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1963)

1897 – சுத்தானந்த பாரதியார், கவிஞர், கவியோகி (இ. 1990)

1897 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (இ. 1985)

1904 – சால்வதோர் தாலீ, எசுப்பானிய ஓவியர் (இ. 1989)

1909 – எல்லிஸ் ஆர். டங்கன், அமெரிக்கத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2001)

1912 – சாதத் ஹசன் மண்ட்டோ, இந்திய-பாக்கித்தானிய எழுத்தாளர் (இ. 1955)

1918 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர், பயிற்றுனர் (இ. 2016)

1918 – ரிச்சர்டு பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)

1924 – அந்தோனி எவிழ்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வானியலாளர், இயற்பியலாளர்

1992 – தீபோ கூர்த்துவா, பெல்சியக் காற்பந்தாட்ட வீரர்

இன்றைய தின இறப்புகள் 

1610 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதகுரு, கணிதவியலாளர் (பி. 1552)

1812 – ஸ்பென்சர் பேர்சிவல், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1762)

1871 – ஜான் எர்ழ்செல், ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர், வேதியியலாளர் (பி. 1792)

1889 – ஜோன் கட்பெரி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1801)

1916 – கார்ல் சுவார்சுசைல்டு, செருமானிய வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1873)

1927 – ஜுவான் கிரிஸ், எசுப்பானிய ஓவியர் (பி. 1887)

1976 – அல்வார் ஆல்ட்டோ, பின்லாந்து கட்டிடக்கலைஞர் (பி. 1898)

1978 – பி. வி. நரசிம்ம பாரதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1924)

1981 – பாப் மார்லி, சமாய்க்கா பாடகர் (பி. 1945)

2001 – டக்ளஸ் ஆடம்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1952)

 

இன்றைய தின சிறப்பு நாள் 

தேசிய தொழில்நுட்ப நாள் (இந்தியா)

Categories

Tech |