மே 14ஆம் தேதி முதல் மே 31 வரை நாகர்கோயிலில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசியம் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள், ஆட்டோ, மாநகராட்சி பேருந்துகள் போன்றவை இயங்காது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நாகர்கோவிலிலிருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் வண்டி 06321 நாகர்கோவில்- கோயம்புத்தூர் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06322 கோயம்புத்தூர்- நாகர்கோயில் சிறப்பு ரயில் ஆகியவை மே 14 ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.