உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வு மே 2 முதல் மே 17 வரை நடைபெற இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனை கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உறுதி செய்துள்ளார்.
கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கான யுஜிசி – நெட் தேர்வு வரும் மே மாதத்தில் நடைபெறும். அந்த மாதம் 11 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டின் மே மாதத்தில் 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14 & 17 ஆகிய தேதிகளில் நெட் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் மார்ச் 3ஆம் தேதி வரை https:/ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்படும். முதல் தாளுக்கு 100 மதிப்பெண்களும், இரண்டாம் தாளுக்கு 200 மதிப்பெண்களும் கொண்டது. வழக்கமாக இந்த தேர்வுஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். கொரோனா காரணமாக இன்று முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை இந்த தேர்வை எழுத தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை மார்ச் 3 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.