Categories
பல்சுவை

உயிரிழப்புக்கு பின் கொண்டாடபட்ட மே தினம்… உண்மை வரலாறு…!!

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது உரிமைகளைப் பெற அவற்றை நிலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கூலித்தொழிலாளர்கள் தொடங்கி ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் வரை ஏதேனும் ஒரு தருணத்தில் போராட்டங்களுக்கு வருவதில் விதிவிலக்குகள் என்று எவரும் இல்லை. சமீபத்தில்கூட ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது சுமூக தீர்வை பெற்றனர். இந்திய மருத்துவ கவுன்சிலை களைத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை வாபஸ் பெறக் கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் விவசாயிகள் நிலைமை கவலைக்குரியது என்றால் தமிழக விவசாயிகள் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. மழையின்மை, அதன் காரணமாக ஏற்படும் வறட்சி, பூச்சி தொற்று, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை அடுத்தடுத்து போட்டிபோட்டு விவசாயத்தையும் விவசாயிகள் வாழ்க்கை தரத்தையும் பாதித்து வருகின்றன. விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர் நிர்வாணப் போராட்டம் உட்பட. ஆனால் விவசாயிகள் கோரிக்கை எதுவும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

ஜனநாயகம் தங்களுக்கென பிரத்தியேக சட்டங்கள் வகுக்கப்பட்ட இன்றைய சூழலில் கூட வீதிக்கு வந்து போராடி தான் தங்களது உரிமைகளை பெற வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் தொழிலாளர்கள். தற்போதைய சூழ்நிலையை இத்தனை நிலைமை என்றால் ஜனநாயக கருத்துக்கள் அவ்வளவாக வலுப்பெறாத,  தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் என்ற ஒன்றே இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த தொழிலாளர்களின் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும். மே தினம் அல்லது தொழிலாளர் தினம் என்பது அமெரிக்காவில் 8 மணி நேர வேலை கோரிக்கை வைத்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க தொழிலாளர்களின் வீரம் நிறைந்த போராட்டத்தில் முதலாளி தொழிலாளி எப்படி தோன்றியது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. ஆரம்பத்தில் கூட்டமாக வாழ்ந்து வந்த மனிதனுக்கு தனக்கென சொத்துக்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று என்ற எண்ணம் ஏற்படவில்லை. கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்த மனிதர்கள் ஒன்றாக இணைந்து வேட்டையாடி கிடைத்தவற்றை ஒன்றாக பகிர்ந்து உண்டு ஆட்சி நடத்தி வந்தனர். நூற்றாண்டுகள் செல்ல செல்ல நிலைமை மெல்ல மெல்ல மாற தொடங்கியது. கால்நடைகள் வளர்ப்பு தொடங்கியது, விவசாய முறை கண்டுபிடிக்கப்பட்டது, குடும்ப முறை உருவானது.

இதனால் மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து விலகி நிலையான இடத்தில் வசிக்க ஆரம்பித்தான். வீடுகள் கட்ட, விவசாயம் செய்ய, கால்நடைகளைப் பாதுகாப்பான இடத்தில் அடைத்து பராமரிக்க நிலங்கள் தேவைப்பட்டன. எனவே அன்றைய மனிதர்கள் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். வலிமையுடையது பிழைக்கும் என்ற கூற்றின் படி வலிமை உடையவர்கள் நிலங்களை தங்களுக்குரியவைகளாக மாற்றிக்கொண்டனர். அந்த நிலங்களில் குடும்பத்திற்கான வீடு கட்டவும், அதிக அளவில் கால்நடைகளை வளர்க்கவும். விவசாயம் செய்யவும் தொடங்கினார் வலியவர்கள் தங்களுக்கென நிலங்களை ஆக்கிரமித்து ஆடம்பர வாழ்க்கை நடத்த தொடங்கினர்.

சரி வலிமையற்றவர்களின் நிலைமை என்ன என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. இதற்கான பதில் உடல் வலிமை உடையவர்கள் கீழ் கூலிகளாக அடிமைகளாக வேலை செய்ய தொடங்கினர். உண்மையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றே சொல்லலாம். சில நூற்றாண்டுகளில் அடிமைமுறை அனைத்து இடங்களிலும் பரவியது இதன் தொடர்ச்சியாகத்தான் பின்னாளில் முதலாளி மற்றும் தொழிலாளி வர்க்கம் தோன்றியது. இனக்குழுக்கள் மற்றொரு இனக் குழுவுடன் போரிட்டு தங்களுக்கு தேவையானவற்றை கவர்ந்து கொள்வது போல நாடுகள் பிற நாடுகளுடன் போரிட்டுக் வளங்களைக் கொள்ளை அடித்தனர்.

தோல்வி அடைந்த நாடுகளில் இருந்து அடிமைகளும் அதிக அளவில் கிடைத்தன. அடிமைகள் என்பவர்கள் ஊதியம் பெறாத தொழிலாளர்கள் என்று கூறலாம். கால்நடை போல எஜமானர்களால் நடத்தப்பட்ட இந்த அடிமைகள் கடுமையாக உழைக்கவும் செய்தனர். கால்நடைகளை போலவே விற்பனையும் செய்யப்பட்டனர். அத்தியாவசியத் தேவைகளான உணவு உடையை உற்பத்தி செய்யவும், உறைவிடங்கள், கோவில்கள், பிரமிடுகள் போன்றவைகளை கட்டவும் ஆடம்பரப் பொருட்களை உருவாக்கவும் மனித உழைப்பு அதிகமாக தேவைப்பட்டது. அதற்கு ஆரம்ப காலத்தில் இலவச உழைப்பை வழங்கிய அடிமைகள் கிடைத்தன. நவீன காலத்தில் அதிக தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

அதுவும் குறைந்த ஊதியத்தில் அதிக மணிநேரம் பணியாற்றும் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதில்தான் முதலாளி மற்றும் தொழிலாளிகள் இடையே இடைவெளி ஏற்பட்டது. இந்த இடைவெளியானது அன்று தொடங்கி இன்று வரை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இவற்றின் அடிப்படையில்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தொழிலாளர் போராட்டம், மே தினத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். மே தினத்திற்கு அடிப்படையாக அமைந்தது முதலாளிகள் தொழிலாளர்கள் என்கிற பாகுபாடு தான்.இந்த பாகுபாடானது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில்தான் நீராவி எந்திரத்தை விசைத்தறி உள்ளிட்ட இயந்திரக் கருவிகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த இயந்திரங்கள் அதிக விலை உடையவை இவற்றை பணம் படைத்தவர்களால் அதாவது பெருமுதலாளிகள் தான் வாங்க இயலும். இத்தனை இயந்திரங்களால் குறைந்த நேரத்தில் அதிக அளவிலான பொருளை உற்பத்தி செய்து குவிக்க முடிந்தது. இந்த இயந்திரங்கள் பலரது வேலைகளையும் பறித்தன. பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. இந்த ஆலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் எந்திரங்களை போலவே நடத்தப்பட்டனர். ஆனால் குறைந்த ஊதியமே அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் என்பது கிடையாது. 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை வேலை பார்க்கப்பட்டனர். இந்நிலையில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் அமெரிக்காவின் எந்திர வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமைகளை பெற ஏதுவாக தங்களுக்கான சங்கம் ஒன்றை உருவாக்கினர்.

உலகில் முதன் முதலாக தொடங்கப்பட்ட தொழிற்சங்கம் இதுதான் என்று கருதப்படுகின்றது. தொழிலாளர்களிடம் 10 மணி நேரம்தான் வேலை வாங்க வேண்டும் என முதன் முதலில் முழக்கமிட்ட கோரிக்கை வைத்த பெருமையும் இந்த தொழிற்சங்கத்தை சாரும். இந்த தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் ஏற்படத் தொடங்கின 1827 ஆம் ஆண்டு கட்டட தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் போதும் பத்து மணி வேலை என்ற கோரிக்கை முன்னிறுத்தப்பட்டது. முற்போக்கான பத்திரிக்கைகளிலும் தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்து தெரிவிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்டன.

அந்த வகையில் தொழிலாளிகள் அடிமைகளைக் காட்டிலும் மோசமாக நடத்தப்படுவதாகவும் 20 மணி நேரம் வரை வேலை வாங்க படுவதாகவும் தொழிலாளர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக 10 மணி நேர வேலை என்ற முழக்கம் அமெரிக்காவின் அனைத்து தெருக்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. போராட்டங்களும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தன போராட்டங்களுக்கு அடிபணிந்த அமெரிக்க அரசாங்கம் அரசு ஊழியர்கள் 10 மணி நேர மட்டும் வேலை செய்தால் போதுமானது என்று அறிவித்தது. அரசு ஊழியர்கள் போன்று அனைத்து தொழிலாளர்களும் 10 மணி நேரம் என்று பணி நேரத்தை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தது.

போராட்டங்களுக்கு செவிசாய்த்த பெரும்பாலான தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய தொழிலாளிகள் இந்த முறை 8 மணி நேரம் வேலை நேரம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். மீண்டும் போராட்டங்கள் தொடங்கின அமெரிக்காவில் மட்டுமல்லாது பெரும்பாலான நாடுகளிலும் அந்த சமயத்தில் 1850களில் 8 மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியாவில் கட்டட தொழிலாளர்களும் 8 மணி நேரம் வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர பொழுதுபோக்கு என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1858ஆம் ஆண்டு அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் 1866 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தேசிய தொழிற் சங்கம் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு நடைபெற்ற அச்சங்கத்தின் முதல் மாநாட்டில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அமெரிக்கா முழுவதும் எட்டு மணி நேர வேலை என சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அடிமைத்தனத்தில் இருந்து தொழிலாளர்களை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனை அடைய நாங்கள் எங்களுடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி போராட தீர்மானிக்கிறோம்.

இதுவே அந்த தீர்மானம். இந்த தேசிய தொழிற்சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் அரசு ஊழியர்கள் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும் என்று அறிவித்தனர்.1868 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. 1866 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற காங்கிரஸ் தொழிற்சங்க கூட்டத்தில் வேலைசெய்ய சட்டபூர்வமான நேர நிர்ணயம் முதன்மையானது எனவும் இல்லாவிட்டால் தொழிலாளர் வர்க்கமானது முன்னேற்றம் மற்றும் விடுதலைக்காக எடுக்கும் எந்த முயற்சியும் பலன் அளிக்காது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

8 மணி நேர வேலை என்ற சட்டத்தை தீர்மானிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 8 மணி நேர வேலையை வலியுறுத்தி 1877 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால் இந்த போராட்டம் வன்முறையை நோக்கி நகர்ந்தது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அமெரிக்காவில் தொழிலாளர் வர்க்கத்தினால் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான போராட்டமாக இது உருமாறியது.  இருப்பினும் அரசின் படையால் போராட்டம் ஒடுக்கப்பட்டது. மே தினம் உருவாக காரணமாக அமைந்தது 1886-ம் ஆண்டு மே 1ஆம் தேதி 8 மணி நேர கோரிக்கையை வலியுறுத்தி நடந்த போராட்டம் நான்கு நாட்களை தாண்டியும் தொடர்ந்தது.

இதனை வளர விட்டால் ஆபத்து என்று எண்ணி அரசு போராட்டத்தை எவ்வாறேனும் கலைக்க  முடிவெடுத்தது. அன்றைய தினம் திரண்டிருந்த 500 தொழிலாளர்கள் மத்தியில் தொழிலாளர் தலைவர் உரையாடிக்கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை கலைக்கும் பொருட்டு காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர் இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். இந்த அடக்குமுறையை கண்டித்து நகரின் மையப்பகுதியில் கண்டனக் கூட்டம் நடந்தபட்டது இந்த கூட்டத்தில் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மழை பெய்ய தொடங்கியதால் பளார் களைந்து போயினர். 200 தொழிலாளர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.

500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். கூட்டத்தினரை உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். தொழிலாளிகள் களைந்து போக மறுக்கவே அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்த தொடங்கினர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. காவல்துறையினர் மீது கையெறி குண்டு வீசப்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.  70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இந்த வழக்கு ஒரு  வருடத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் நடைபெற்று தொழிலாளர்கள் தலைவர்கள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை வழங்க பட்டது.

இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்களும் வலுப்பெற்றது. இதனால் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 1889 ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது 11 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் முன்வைத்த 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும் சிக்காகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் மே மாதம் ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும்  மே 1 தொழிலாளர்கள் தினம் கொண்டாடுவது என்பது ஒரு குறியீடாக அமைந்தது. அந்த ஒற்றை போராட்டத்தை மட்டுமே குறிக்க வில்லை மாறாக உரிமைகள் கோரி போராட்டங்களை முன்னெடுத்த அதனால் உயிர் நீத்த அனைத்து தொழிலாளர்களையும்  அவர்களின் போராட்டங்களையும் தொழிலாளர் தினம் நினைவு கூறுகின்றது. எனவே இந்த தொழிலாளர் தினத்தில் நாமும் அத்தகைய தொழிலாளர் போராட்டங்களையும் போராட்டங்களில் உயிர்நீத்தவர்களையும் நினைவு கூறுவோம்.

Categories

Tech |