தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயது ஆகும் நிலையில் அவருடைய திருமணம் எப்போது என்பது தான் பலரது கேள்வியாகவும் இருக்கிறது. நடிகர் சிம்பு நேரம் வரும்போது என்னுடைய திருமண பற்றி நானே சொல்கிறேன் என்று பேட்டிகளில் கூறி வரும் நிலையில், சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் தன்னுடைய மகன் திருமணம் குறித்து தற்போது பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது டி. ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் சிம்புவின் ஜாதகத்தை வைத்து பூஜை நடத்தினார். அந்த பூஜைக்கு பிறகு டி. ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சிம்புவுக்கு தகுந்தார் போன்று ஒரு பெண்ணை நானும் என்னுடைய மனைவி உஷாவோ தேர்வு செய்வதற்கு பதிலாக அந்த இறைவனே எங்கள் வீட்டுக்கு நல்ல மருமகளாக தேர்வு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் நடிகர் சிம்புவுக்கு டி. ராஜேந்தர் வரன் பார்ப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.