Vமயான கொட்டகை இல்லாததால் எரிந்து கொண்டிருந்த சிதை மழையில் அணைந்தது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குடிகாடு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். சக்திவேல் மாற்றுத்திறனாளி
ஆவார். கடந்த சில நாட்களாக சக்திவேல் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார்.
இதனை அடுத்து நேற்று முன்தினம் மாலை அவரது உடல் கொள்ளிடக்கரையில் இருக்கும் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்குள்ள மயானமானது கொட்டகை வசதி எதுவும் இல்லாததால் திறந்த வெளியில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் சிதை எரிந்து கொண்டிருக்கும்போது திடீரென மழை பெய்ததால் அது அணைந்தது. பின்னர் மறுபடியும் எறியூட்டப்பட்டு சக்திவேலின் உடல் முழுமையாக தகனம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் மயான கொட்டகையை அமைத்து தர வேண்டும் என்பது அங்குள்ள மக்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது. மேலும் மயானத்திற்கு செல்ல சாலை வசதியும் மின் விளக்கும் அமைத்து தர அங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இனியாவது தாமதிக்காமல் உடனடியாக மயான கொட்டகை, சாலை வசதி மற்றும் மின் விளக்கு போன்றவற்றை உடனடியாக ஏற்படுத்தித் தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.