துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மணிமாறன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் முக்குடல் தியாகராஜர் தெருவில் உள்ள ஒரு துக்க வீட்டுக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனையடுத்து துக்க வீட்டில் நின்றுக்கொண்டிருந்த மணிமாறன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.
இதனைபார்த்த அருகிலுள்ளவர்கள் மணிமாறனை முக்கூடல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மணிமாறனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த முக்கூடல் காவல்துறையினர் மணிமாறனின் சடலத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.