Categories
உலக செய்திகள்

மாயமான அருணாச்சல பிரதேச இளைஞர்கள் – சீன ராணுவம் விளக்கம்…!!

அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்திருந்த   நிலையில் நேற்று இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளது.

அருணாசல பிரதேசத்தின் சுமன்ஸ்ரீ மாவட்டத்தில் சீன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இவர்களை சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இந்திய ராணுவத்தினர் அனுப்பிய செய்திக்கு சீன ராணுவம் பதில் அனுப்பியது. மாயமான 5 வாலிபர்களும் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

அவர்களை இந்திய அதிகாரிகளுடன் ஒப்படைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜு ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் 5  இளைஞர்களையும் இந்தியாவிடம் நேற்று சீன ராணுவம் ஒப்படைக்க உள்ளது. வார்ஷா அருகிலுள்ள கிபித்து எல்லையில் அவர்கள் ஒப்படைக்க படுவார்கள் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |