Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாயமான சிறுவன் …. துறைமுகத்தில் பிணமான மீட்பு …. மயிலாடுதுறையில் சோகம் …..!!!

மயிலாடுதுறை பூம்புகாரில் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மயிலாடுதுறை மாவட்டம்  நீடூர்-நெய்வாசல் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் ஆதித்யன்(16). இவர் கடந்த 25-ஆம் தேதி  தனது குடும்பத்தினருடன் பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கடற்கரை மணலில் ஆதித்தியன் விளையாடிக்கொண்டிருந்தார். இதன் பின்னர் அவர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று வந்த ராட்சத அலையில் சிக்கி ஆதித்தியன் மாயமானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கடற்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடற்கரை காவல் போலீசாருடன் இணைந்து மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மீன்பிடித் துறைமுகம் அருகே ஆழமான கருங்கற்கள் பகுதியில் நேற்று காலை சிறுவன் ஆதித்யாவின் உடன் பிணமாக மிதந்து கொண்டிருப்பதாக கடற்கரை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்து கொண்டுவரப்பட்ட நவீன கருவியின் மூலம்  கருங்கற்கள் இடையில் சிக்கிக் கொண்டிருந்த சிறுவனின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. இதன்பிறகு சிறுவனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |