மயானத்துக்கு செல்ல வலி இல்லாத காரணத்தினால் 10-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் மாற்றுப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருத்தணி சாலையில் இருக்கும் மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை நந்தி ஆற்றை கடந்து எடுத்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இந்நிலையில் ஏரி நிரம்பி நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்காலிகமாக அமைத்து இருந்த மண் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து இதற்கு மாற்றுப் பாதை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் தலைமையில் 1௦-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் மாற்று பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.