Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உட்கார்ந்திருந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக நாராயணதாஸ் என்பவர் பணியாற்றி ஒய்வு பெற்றார். இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேரன்மகாதேவி அடுத்த கூனியூர் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருந்த நாராயணதாஸ் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் நாராயண தாசை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாராயணதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சேரன்மகாதேவி காவல்துறையினர் இறந்த நாராயணதாசின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.

Categories

Tech |