Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மயங்கி விழுந்த தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள கடம்ஹரியா பகுதிகளில் இலராம்மண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது மனைவியும் பணகுடி அருகில் உள்ள கூத்தன்குளம் பகுதியில் தங்கியிருந்து கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென இலராம்மண்டி மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இலராம்மண்டியை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே இலராம்மண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பலவூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இலராம்மண்டியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பழவூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |