கடையில் இனிப்பு வாங்கி கொண்டிருக்கும் போது தி.மு.க பிரமுகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள பாளையக்கார தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க துணைச் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா கடையில் இனிப்பு வாங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென கீழே மயங்கி விழுந்துள்ளார்.
அதன்பின் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மாரடைப்பு காரணத்தால் ராஜா உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.