சைக்கிளில் சென்ற முதியவர் கீழே விழுந்து எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் காமராஜர் தெருவில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருகாமையில் இருக்கும் சைக்கிள் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனிசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரின் மகனான வெங்கடேசன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.