அரசியல் ஆதாயத்திற்காக தனது மனைவியை கைவிட்டனர் மோடி என்று மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 26_ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கணவனின் கண்ணெதிரே 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஏப்ரல் 30_ஆம் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் மே 7_ஆம் தேதி தான் வழக்கு பதிவு செய்யப்பட்ட்து. இந்த சம்பவத்துக்கு மாயாவதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மோடியும் கடும் விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்து குறித்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ராஜஸ்தான் கூட்டு பலாத்கார சம்பவம் நடைபெற்று இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த மோடி இப்போது தேர்தல் வந்ததும் அதைப் பற்றி பேசுகிறார். இதன்மூலம் மோடி தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்று தெரிகின்றது. அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டுமென்று அவரின் சொந்த மனைவியையே கைவிட்டவர் பிரதமர் மோடி .இவர் எப்படி மற்றவர்களின் சகோதரிகளையும், மனைவிகளையும் மதிப்பார்” என்று மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.